டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் ராஷ்மிகா மந்தனா.. வீடியோவுக்கு பின் அதிர்ச்சி உண்மைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோ போலியான வீடியோ என்றும் டீப்ஃபேக் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இதே போல் ஷாரா படேல் என்ற நடிகையின் ஒரிஜினல் வீடியோவில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி போலி வீடியோவாக மர்ம நபர்கள் சிலர் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவுக்கு அமிதாப்பச்சன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பியா நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் சில விஷமிகள் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி அவர் டூ பீஸ் உடையில் நீர்வீழ்ச்சியில் குளிப்பது போன்று டீப்பேக் செயலை மூலம் மாற்றி உள்ளனர்.
இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா டெல்லி காவல்துறையில் புகார் அளித்த நல்ல நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உங்களுடைய புகைப்படம் அல்லது வீடியோவை உங்கள் அனுமதியின்றி யாராவது பயன்படுத்தினால் அதற்கு உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கும் படி ராஷ்மிகா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுபோன்ற பல பிரபலங்களின் டீப்ஃபேக் போலி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com