விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? க்யூட் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்திக்கு அவர் ’க்யூட்’ பதிலை தந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா என்பதும் இவர் தற்போது அமிதாப்பச்சனுடன் ’குட் டே’, விஜய்யுடன் ’வாரிசு’ அல்லு அர்ஜூன் உடன் ‘புஷ்பா 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான ’கீதாகோவிந்தம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் விஜய்தேவரகொண்டா நடித்த ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய்தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக செய்திகள் இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ’இது ஒரு க்யூட் வதந்தி’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments