ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி: நியமன அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே நடிகைகள் சைபர் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சமீபத்தில் டீப் ஃபேக் வீடியோ மூலம் பாதிக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தூதராக ராஷ்மிகா மந்தனா நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சைபர் கிரைம் என்பது உலகில் உள்ள தனிநபர்கள், வணிகர்கள், சமூகங்களை பாதிக்கும் ஆபத்தான அச்சுறுத்தல் ஆகும்.

இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய குற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு சென்று மாற்றத்தை உருவாக்கவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த பதவியில் செயல்படுவேன், என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு எனக்கு கொடுத்த இந்த வாய்ப்புக்கு நன்றி என்றும், நாம் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, ராஷ்மிகா மந்தனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.