தளபதி விஜய் படம் குறித்த தவறான தகவல்.. வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா..!

  • IndiaGlitz, [Saturday,December 21 2024]

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் படம் குறித்த தவறான தகவலை கூறியதை அடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி அளித்த ராஷ்மிகா மந்தனா, தான் பார்த்த முதல் தமிழ் திரைப்படம் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் என்று கூறினார். குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு என்ற பாடல் தனக்கு மிகவும் விருப்பமான பாடல் என்றும், அந்த பாடலை பலமுறை கேட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், ’கில்லி’ திரைப்படம் இந்த படம் மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்று கூறினார். உண்மையில், மகேஷ்பாபு நடித்த ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் தான் ’கில்லி’ என்பதும், போக்கிரி படத்தின் ரீமேக் அதே டைட்டில் தான் விஜய் நடித்த போக்கிரி வெளியானது என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்

இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தனது தவறை உணர்ந்து கொண்ட ராஷ்மிகா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

More News

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? டபுள் எவிக்சன் உண்டா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால்,

'ஜெயிலர் 2' படப்பிடிப்பு எப்போது ? முக்கிய பணியை ஆரம்பித்த நெல்சன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த

படமே முடிய போகுது.. 'விடாமுயற்சி' திரைப்படத்தில் திடீரென இணைந்த டிவி பிரபலம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின்

வெற்றிக்கான சூத்திரம் எது? பணமா? ஆன்மீகமா? : யோக குரு பரம் ஸ்ரீ சூரத் என்ன சொல்கிறார்?

இந்த வீடியோவில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இடையே உள்ள தொடர்பை பிரம்மஸ்ரீ சூரத் ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

பிரபல ஹீரோ படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன்..! 

பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.