அமிதாப் படத்தில் வாய்ப்பு பெற்ற கார்த்தி பட நாயகி!

  • IndiaGlitz, [Sunday,December 27 2020]

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ’சரிலெரு நீகேவரு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் அதனை தொடர்ந்து அவர் தற்போது அல்லு அர்ஜுனுடன் ’புஷ்பா’ என்ற படத்திலும் சர்வானந்த் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியுடன் தமிழில் இவர் நடித்த ‘சுல்தான்’ விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் வைரலானது

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவரது மகளாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பதும் அப்பா-மகள் பற்றிய சென்டிமென்ட் கதையம்சத்துடன் கூடிய இந்த படத்தில் நீனா குப்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகி என்றும் அதேபோல் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இது சாதாரண நடிப்பில்லைடா சாமி, வேற லெவல் நடிப்பு: ரம்யாவை கலாய்த்த தமிழ் நடிகர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் திறமையை கொண்டவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ரம்யா குறித்து 'இவருடைய நடிப்பு சாதாரண நடிப்பு இல்லை கேலக்ஸி லெவல் நடிப்பு என்று தமிழ் நடிகர்

இதெல்லாம் கேட்டு வாங்குற விஷயமா? அனிதாவை செல்லமாக கண்டித்த கமல்!

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறப் போவது யார் என்பதை அறிவிக்கும் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் எவிக்சன் கார்டை கையில் கமல் அதை அறிவிக்கும் முன்னரே,

அம்பி மாதிரி ஏன் இருக்கிங்க: காலரின் அதிரடி கேள்வியும் ஆரியின் சரியான பதிலும்!

பிக்பாஸ் வீட்டில் ஆரியின் கண்ணில் இருந்து ஒருவரும் தவறு செய்து விட்டு தப்பி தப்பி விட முடியாது என்றும் போட்டியாளர்கள் எந்தத் தவறு செய்தாலும் அதை சரியாக ஞாபகம் வைத்து

'தளபதி' சூர்யா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த தேவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

கோவை ஈஷாவில் தியானம் செய்யும் கொரோனாவில் இருந்து குணமாகிய நடிகை!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய நிக்கி கல்ராணி சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகிய நிலையில்