ராஷ்மிகாவின் 'நண்பன்', 'காதலன்', 'கணவன்' பட்டியலில் விஜய்?

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

பிரபல நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் இவர் கார்த்தியுடன் ’சுல்தான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க இவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் தான் நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ராஷ்மிகாவிடம் எந்த நடிகர்கள் உங்களுக்கு நண்பன், காதலன் மற்றும் கணவனாக வர வேண்டும் என்று விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா, நிதின் தனது நண்பராக இருப்பார் என்றும் தளபதி விஜய் தனது பாய் பிரண்ட் ஆக இருப்பார் என்று கூறினார். மேலும் எந்த நடிகர் கணவராக வரவேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் தான் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் நாயகியாக நடிக்க முதலில் ராஷ்மிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதும் அதன்பின்னர் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் இதனை அடுத்தே தற்போது மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யுடன் இணைந்து அவர் விரைவில் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.