நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணம் செய்துகொண்டாரா? லவ்வர் பற்றிய செம ஷாக்கான தகவல்…!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் ராஷ்மிகா மந்தனா ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக நேர்காணல் ஒன்றில் கூறிய நிலையில் அவருடைய காதலர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காரணம் அவர் ஒரு கார்ட்டூன் பொம்மையைப் பற்றி பேசியிருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னட நடிகையான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்‘, ‘டியர் காம்ரேட்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்திவரும் அவர் தற்போது ‘அனிமல்’ திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிவரும் இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தவிர தெலுங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்திலும் அதேபோல தமிழில் ‘ரெயின்போ’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஷர்வன் ஷா என்பவர் தொகுத்து வழங்கிய அந்த நேர்காணலில் நீங்கள் கார்டூன் கேரக்டர் நரூட்டோவை ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களாமே? அது உண்மையா என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ‘ஆமாம் நான் அவரைத் திருமணம் செய்துவிட்டேன். என் இதயமே நரூட்டோவுக்குத்தான். எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரமே அதுதான். அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்து கொண்டேன்‘ எனக் கூறியுள்ளார். இந்தப் பதிலைக் கேட்டவுன் அருகில் இருந்த நடிகர் ஷெராப் கடுமையாக அதிர்ச்சி அடைந்ததுடன் அதற்குப் பிறகு அது கார்டூன் கேரக்டர் என்று தெரிந்து கொண்டு சிரிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா கார்டூன் கேரக்டர் நரூட்டோவை போன்றே இருக்கும் பொம்மை ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கார்டூன் கேரக்டர்கள் மீது ஆர்வம் காட்டிவரும் நிலையில் நடிகை ராஷ்மிகா நாரூட்டோவை விரும்புவதாகக் கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com