ஓட்டலில் ராஷ்மிகா திருடிய பொருள்: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓட்டலில் தங்கியிருந்தபோது தான் ஒரு பொருளை திருடியதாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒரு பிரபல ஓட்டலில் தங்கியிருந்த போது அந்த ஓட்டலில் இருந்த தலையணை உறை மிகவும் அழகாக இருந்ததாகவும் அதனால் அதை திருடி விட்டதாகவும் நகைச்சுவையுடன் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மன அழுத்தம் ஏற்பட்டால் தான் செய்வது என்னென்ன என்பது குறித்தும் வீடியோ மூலம் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இதை நீங்களும் கடைபிடித்து பாருங்களேன் என்று அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக தான் உடற்பயிற்சி செய்வதாகவும் இதனால் தனது மன அழுத்தம் குறையும் என்றும் கூறியுள்ளார். மேலும் இசையை ரசித்து கேட்டுக் கொண்டே நடனம் ஆடுவேன் என்றும் அப்போது மனம் அழுத்தம் முற்றிலும் குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மன அழுத்தம் தொடர்ந்தால் உடனே அதிக ஐஸ் கிரீம்களை வாங்கி சாப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் வீடியோ மூலம் தனது சமூக தளங்களில் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s me answering all your questions from yesterday and a lot more, before the match begins??#RushHour https://t.co/673r0RpAAg
— Rashmika Mandanna (@iamRashmika) September 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com