ஓட்டலில் ராஷ்மிகா திருடிய பொருள்: வைரலாகும் வீடியோ!

ஓட்டலில் தங்கியிருந்தபோது தான் ஒரு பொருளை திருடியதாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒரு பிரபல ஓட்டலில் தங்கியிருந்த போது அந்த ஓட்டலில் இருந்த தலையணை உறை மிகவும் அழகாக இருந்ததாகவும் அதனால் அதை திருடி விட்டதாகவும் நகைச்சுவையுடன் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மன அழுத்தம் ஏற்பட்டால் தான் செய்வது என்னென்ன என்பது குறித்தும் வீடியோ மூலம் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இதை நீங்களும் கடைபிடித்து பாருங்களேன் என்று அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.

மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக தான் உடற்பயிற்சி செய்வதாகவும் இதனால் தனது மன அழுத்தம் குறையும் என்றும் கூறியுள்ளார். மேலும் இசையை ரசித்து கேட்டுக் கொண்டே நடனம் ஆடுவேன் என்றும் அப்போது மனம் அழுத்தம் முற்றிலும் குறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மன அழுத்தம் தொடர்ந்தால் உடனே அதிக ஐஸ் கிரீம்களை வாங்கி சாப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் வீடியோ மூலம் தனது சமூக தளங்களில் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா? கமல் பட நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்!

உலகநாயகன் கமலஹாசன் தனது படங்களில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைப்பார் என்பது தெரிந்ததும். டால்பி, டிடிஎஸ் உள்பட பல டெக்னாலஜி அவரது திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டது

மீண்டும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் தனி விமானத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றனர்

நிஜ வாழ்க்கையிலும் ஆக்சன் ஹீரோவான நடிகர்: கேட்டை உடைத்து தள்ளியதால் பரபரப்பு

பிரபல ஹாலிவுட் ஆக்சன் நடிகரும், WWE விளையாட்டு வீரருமான ராக் என்ற டிவைன் ஜான்சன் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருந்தார்.

சர்வதேச ரியாலிட்டி ஷோவில் அனிருத்தின் அட்டகாசமான இசை: ஆச்சரிய தகவல்

அனிருத்தின் இசையில் உருவான பாடல் ஒன்று சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்