பாலிவுட் படத்திற்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 64’ திரைப்படத்திற்காக முதலில் நாயகியாக பரிசீலனை செய்யப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவரிடம் மீண்டும் படக்குழுவினர் அணுகியபோது அவருக்கு பாலிவுட் வாய்ப்பு ஒன்று கிடைத்தால் விஜய்யின் தளபதி 64’ படத்தில் நடிக்க முடியாத நிலையை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரே படக்குழுவினர் படத்தின் நாயகியாக கைரா அத்வானியை தேர்வு செய்ததாக தெர்கிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ’அர்ஜுன்ரெட்டி’ படத்தின் ரீ-மேக்கில் ஷாகித்கபூருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வாய்ப்புக்காக அவர் 'தளபதி 64’ படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் பட வாய்ப்பை இழந்தது தனக்கு மிகவும் ஏமாற்றம் என்று ராஷ்மிகா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தளபதி 64’ படத்தில் கதாநாயகியாக கைரா அத்வானி நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்தப் படத்தில் பணிபுரிபவர்கள் குறித்த தகவல்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.