செம தில்லா டிராக்டர் ஓட்டும் சுல்தான் பட நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமா உலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருடைய க்யூட் சிரிப்புக்கும் உற்சாகமான நடிப்புக்கும் பெரும்பாலான இளசுகள் அடிமையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரவிருக்கும் சுல்தான் பட மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார்.
இந்தப் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகை ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதில் பாடகர் அந்தோனி தாஸ் குரலில் எப்படி இருந்த நாங்க… எனும் பாடல் வரிகள் ஒலிக்கிறது. பின்னணியில் நடிகை ராஷ்மிகா சிறிய டிராக்டர் ஒன்றை வைத்து நிலத்தை உழுது கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்த்த பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்தக் காட்சிகளை படம் பிடிக்கும்போது தான் மிகவும் ரசித்து இதில் நடித்ததாகவும் நடிகை ராஷ்மிகா தெரிவித்து உள்ளார். தெலுங்கு சினிமாவில் “கிரிக்பார்ட்டி” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா பின்பு “கீதா கோவிந்தம்“ மூலம் முன்னணி இடத்தைப் பெற்றார். அதோடு நானி, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் என தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். இந்நிலையில் முதல் முறையாக தமிழில் சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com