close
Choose your channels

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ராஷ்மிகா மந்தனா.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது தெரிந்ததே. கார்த்தி நடித்த ‘சகுனி’ என்ற திரைப்படத்தில் தொடங்கி ’ஜோக்கர்’ ’காஷ்மீரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ’ராட்சசி’ ’சுல்தான்’ உள்பட பல படங்களை தயாரித்துள்ளது. தற்போது கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் சமந்தா நடித்து வரும் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ரொமான்டிக் ஃபேண்டஸி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை இந்த படத்தின் இயக்குனர் உள்பட கூடுதல் விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment