மாலத்தீவு நீச்சல் குளத்தில் 'வாட்டர் பேபி': ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,October 10 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் மாலத்தீவில் இருந்து கொண்டே அவர் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக மிதக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ‘வாட்டர் பேபி’ என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து சில மணி நேரங்களில் சுமார் 20 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’வாரிசு’ அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ ஆகியவை உள்பட சில படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தனுஷின் கேப்டன் மில்லர்’ கார்த்தியின் ‘ஜப்பான்’ உள்ளிட்ட சில படங்களில் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

வந்த முதல் நாளே நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய 4 போட்டியாளர்கள்: பிக்பாஸ் அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் நேற்று தொடங்கியது என்பதும் நேற்றைய நாளில் போட்டியாளர்கள் 20 பேர்களின் அறிமுகம் மற்றும் நடந்தது என்பதும் தெரிந்ததே. 

இனிய நண்பரை இழந்துவிட்டேன், என் அஞ்சலி: கமல்ஹாசன் இரங்கல்

எனது இனிய நண்பர் இழந்துவிட்டேன் என உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார் 

'தளபதி 67' படத்தில் நான் இல்லை: லோகேஷ் கனகராஜ் நண்பர் டுவிட்

தளபதி விஜய் தற்போது 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்: விஜய், அஜித் படங்கள் இல்லையா?

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் விஜய், அஜித் படங்கள் ஒன்று கூட இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுது? அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் டிவி மூலம் பிரபலமாகி திரையுலகிலும் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.