மாலத்தீவில் ராஷ்மிகா மந்தனா.. நீச்சல் குளத்தில் என்ன செய்கிறார் பாருங்கள்!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் மாலத்தீவில் இருக்கும் முதல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் அவர் தற்போது தளபதி விஜய் நடித்து ’வாரிசு’, அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ கார்த்தியின் ’ஜப்பான்’ உள்பட ஒருசில படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றதாக கூறப்பட்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவர் நீச்சல் குளம் அருகில் உட்கார்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் மிதக்கும் உணவை அவர் எடுப்பது போன்ற காட்சி உள்ளது.

கிளாமர் உடையில் கலக்கலாக இருக்கும் ராஷ்மிகாவின் இந்த பதிவுக்கு சுமார் 20 லட்சம் லைக்ஸ்கள், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.