தளபதி விஜய்யின் ரசிகை என அறிமுகம் செய்து கொண்ட பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்ததே. மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்களாக கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் தினத்தன்று முதல் நாள் முதல் காட்சியை கோலிவுட் பிரபலங்கள் திரண்டு பார்த்து அவருடைய படங்களைப் பாராட்டி வருகின்றனர் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகை ராஷிகண்ணா தன்னை தளபதி விஜய்யின் ரசிகை என்று கூறிக்கொள்வதில் பெருமைபடுவதாகக் கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்காக பயங்கரமாக வெயிட்டிங் என்றும், அவருடைய தீவிர ரசிகை நான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தளபதியின் ரசிகை நான் என்று ராஷிகண்ணா கூறிய உடன் எழுந்த கரகோஷம் விண்ணை பிளந்தது. இதனையடுத்து தளபதியின் அடுத்த படத்தில் ராஷிகண்ணா தான் நாயகியாக நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தளபதி 65 படத்தில் ராஷிகன்னா நடிக்க ஒப்பந்தம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
He is everyone’s favourite. I’m a huge fan of #ThalapathyVijay! - @RaashiKhanna#Master @actorvijaypic.twitter.com/l7Xjb6rMXs
— Actor Vijay Fans (@Actor_Vijay) February 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments