விஜய்சேதுபதியின் அடுத்த பட நாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெற்றிப்படங்களை குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்து வரும் 'மாமனிதன், ''சூப்பர் டீலக்ஸ்', 'சிந்துபாத்', 'சயிர நரசிம்மரெட்டி', போன்ற படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நிவேதா பேத்ராஜ் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் ராஷிகண்ணா நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராஷிகண்ணா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். விஜய்சேதுபதி, விஜய்சந்தர், விஜயா புரடொக்சன்ஸ் இணையும் இந்த படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ராஷிகண்ணா தெரிவித்துள்ளார். மேலும் சில ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளிவரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Very happy to announce my next with one of my favourite actors @VijaySethuOffl
— Raashi Khanna (@RaashiKhanna) January 29, 2019
Really looking forward to working with the team.. ☺️ @vijayfilmaker @VijayaProdn
Also, some more exciting announcements on the way ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com