டப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட 'அயோக்யா' நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அயோக்யா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த ராஷிகண்ணாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா தனது மன வருத்தத்தை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'அயோக்யா' திரைப்படத்தில் நாயகி ராஷி கண்ணாவிற்கு டப்பிங் குரல் கொடுத்த போதிலும் எனது பெயர் டைட்டிலில் வரவில்லை. இருப்பினும் இந்த படத்தில் பணிபுரிந்த மெஸ் ஊழியர்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், கார்பெண்டர்கள், சவுண்ட் எஞ்சினியர்கள், மற்றும் பலரின் பெயர்கள் டைட்டில் வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் டப்பிங் கலைஞர்கள் பெயர்கள் மட்டும் அதில் விடுபட்டிருந்தது வருத்த்தை அளிக்கின்றது. காத்திருப்போம்' என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஷிகண்ணா இதற்கு பதிலளிக்கையில், 'ஐயாம் சாரி ரவீனா. உங்கள் இனிமையான குரலை எனக்காக கொடுத்ததற்கு மிகவும் நன்றி. என்னுடைய நடிப்பு ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு இருந்ததற்கு உங்கள் குரலே காரணம் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரவீனா, 'உங்கள் அன்புக்கு நன்றி. மன்னிப்பெல்லாம் தேவையில்லை. இது உங்களுடைய தவறு அல்ல. உங்களுக்காக பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
I am sorry @raveena116 .. but I want to thank you for lending your beautiful voice to me and enhancing my act on screen. Lots of love to you and way to go ???? https://t.co/SLcdMGWZeF
— Raashi Khanna (@RaashiKhanna) May 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com