close
Choose your channels

விஜய்யின் அடுத்த பட நாயகிகள் இவர்களா? 

Wednesday, July 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

'தளபதி 64' திரைப்படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் ஒருபக்கம் கைதி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து கொண்டு இன்னொரு பக்கம் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணிகளையும் செய்து வருகிறாராம்.

இந்த நிலையில் 'தளபதி 64' படத்தின் நாயகிகளாக இயக்குனர் லோகேஷ் இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த இருவரில் ஒருவர் ராஷிகண்ணா. இவர்தான் 'தளபதி 64' படத்தின் மெயின் நாயகியாம். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக 'கீதா கோவிந்தம்' புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கின்றதாம். இவர் ஏற்கனவே 'பிகில்' படத்தின் நாயகியாக பேசப்பட்டு பின்னர் திடீரென அவருக்கு பதிலாக நயன்தாரா கமிட் ஆனார். எனவே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த ராஷ்மிகா அடுத்த படத்திலேயே அந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment