பிறந்தநாளில் பசுமை மீது பாசம் காட்டும் இளம் நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது தமிழ் சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது 31 ஆவது பிறந்தநாளை சிறப்பித்த அவர் மரக்கன்று ஒன்றை நட்டு, பசுமைக்கு குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ் கஃபே“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்“ படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதைத்தவிர “அடங்கமறு“, “சங்கத்தமிழன்“, “அரண்மனை3“, “துக்ளக் தர்பார்“ போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை ராஷி கண்ணா தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து “திருச்சிற்றம்பலம்“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே “சர்தார்“, “மேதாவி“, “சைத்தான் கே பட்சா“ போன்ற படங்களை தன்கைவசம் வைத்துள்ளார்.
இப்படி தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக ஒரு சிறிய மரக்கன்றை நட்ட அவர் சென்ற பிறந்தநாள் முதல் மரக்கன்று நடுவது குறித்து சபதம் எடுத்துக்கொண்டேன். அதனால் இந்த சிறிய மரக்கன்றை நட்டு மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மேலும் அன்னை பூமியை வளமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஊக்குவிப்போம். மேலும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும் அனைவருக்கும் எனது நன்றிகள் என்ற நடிகை ராஷி கண்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments