அமெரிக்காவில் பேமஸ் ஆன நம்ம ஊரு ரசம்!!! எப்படி தெரியுமா???

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

 

கொரோனா நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டல் நிறுவனம் அந்த ஊரின் நோயாளிகளுக்கு இம்யூனிட்டி சூப் எனும் பெயரில் நம்ம ஊரு ரசத்தை பரிமாறியது. இதனால் நியூஜெர்சி, நியூயார்க் போன்ற இடங்களில் மிளகு, சீரகம், மஞ்சள் கலந்த ரசம் தற்போது சக்கைப் போடு போடுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டாம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் நியூயார்க் நகரில் உள்ள பிரின்ஸ்ட்ன் எனும் ஹோட்டல் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். கொரோனா நேரத்தில் அந்த ஊரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவலாம் என நினைத்த அவர் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்த ரசத்தை சேர்த்து உணவை பரிமாறத் தொடங்கினார். மேலும் இந்த ரசம் இம்யூனிட்டி தன்மைக் கொண்டது எனவும் விளக்கம் அளித்து இருக்கிறார்.

இதை அருந்திய கொரோனா நோயாளிகள் தொண்டைக்கு இதமாக இருக்கிறது எனக்கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அருணுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அந்த ஹோட்டல் நிறுவனம் நியூயார்க், நியூஜெர்சி நிறுவனக் கிளை மற்றும் கனடாவில் இருக்கும் அதன் கிளைகளிலும் நம்ம ஊரு ரசத்தை தற்போது விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. இதனால் சமூக வலைத்தளத்திலும் ரசத்தின் பெருமையை எடுத்துக் காட்டிய அருணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.