மஞ்சள் நிறத்தில் ஆமை? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மஞ்சள் நிறத்தில் உள்ள அரிய வகை ஆமையின் புகைப்படம் ஒன்றை வனத்துறை அதிகாரியான தேபாஷிஷ் சர்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் பார்த்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் இந்த ஆமையை கண்டதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார்.
அல்பினோ வகையைச் சேர்ந்த இந்த அரிய வகை ஆமை ஃபிளாப்ஷெல் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது. மேலும் விசித்திரமான மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் ஒருவேளை பிறவி கோளாறாக இருக்கலாம் அல்லது சில மரபணு மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் எனவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட ஆமையானது உண்மையில் இந்திய மடல் ஷெல்லின் மஞ்சள் மார்ப் எனும் அரிய வகையைச் சேர்ந்தது எனவும் கூறுகின்றனர். முன்னதாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் எனும் பகுதியில் இதேபோல ஒரு அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டறியப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சள் நிறத்தில் உள்ள ஆமையை இணையத்தில் பலரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.
Today a Yellow Turtle was rescued from a Pond in Burdwan,WB. It's one kind of a rarely occuring Flapshell Turtle. @ParveenKaswan @SanthoshaGubbi @RandeepHooda @rameshpandeyifs pic.twitter.com/enTyNAkxmP
— Debashish Sharma, IFS (@deva_iitkgp) October 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout