தித்திக்கும் மாம்பழம்...லட்சங்களில் விலை....! காவலுக்கு நாய்கள் எதற்காக...?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு கிலோ மாம்பழத்தின் விலை லட்சங்களில் இருப்பதால், பலரும் அது என்ன மாம்பழம் என தேடி வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அதிர்ஷ்டசாலிகள் தான், சங்கல்ப் - ராணி என்ற தம்பதியினர். இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சில மரக்கன்றுகளை, சாதாரண மரம் தான் என்று நினைத்து நட்டியுள்ளனர். ஆனால் அந்த மரம் தான் தற்போது இவர்களை லட்சாதிபதிகளாக மாற்றவுள்ளது. காரணம் இந்த மரங்கள் அதிசயமான ரூபி நிற மாம்பழங்களை தந்துள்ளது. இதன்பின்பு தான் இவை அரியவகை ஜப்பான் மாம்பழங்களான மியாசகி வகையை சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக கருதப்படும், மியாசகி-ன் ஒரு கிலோ விலை ரூ.2 லட்சத்து 70 ஆயிரமாகும்.
இதுகுறித்து அந்த தம்பதி கூறியிருப்பதாவது,
"இந்தியாவில் மியாசகி விளைவது அரிதாகும், கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு நாங்கள் மரக்கன்றுகள் வாங்கசென்றோம். தற்சமயம் ரயிலில் ஒருவர் இந்த மரக்கன்றுகளை எங்களுக்கு கொடுத்து "குழந்தை போல பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என சொன்னார். அந்தகன்றுகள் தான் தற்போது அரியவகை மாம்பழங்களை தந்துள்ளது. ஒரு பழத்தை மட்டும் ரூபாய் 21 ஆயிரம் கொடுத்து வாங்க, பல பணக்காரர்கள் வருகிறார்கள். ஆனால் அவற்றை நாங்கள் விற்காமல், செடிகளை வளர்த்த பயன்படுத்துகின்றோம். சென்ற வருடம் எங்கள் தோட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து பழத்தை திருடிச் சென்றுவிட்டார்கள். அதற்காக 2 காவலாளிகளையும், 6 நாய்களையும் தோட்டக்காவலுக்காக தற்போது வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா என்பவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது, "இந்த மாம்பழத்தை ஆய்வு செய்ததில், இந்தியாவில் அரிதாக இருப்பதாக கண்டறிந்தோம். இந்த மாமரம் விலை உயர்ந்தது, ஆனால் குறைவாகத்தான் உற்பத்தியாகும், சுவை இனிமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments