ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது. கொரோனா பேரிடருக்கு நடுவே இத்தனை விலை கொடுத்து இந்த டீத்தூளை ஒருவர் ஏலத்தில் எடுத்து இருக்கிறார்.
குவஹாத்தி அடுத்த திப்ருகான் எனும் பகுதியில் உள்ள மனோஹரி கோல்ட் டீ தேயிலைத் தோட்டம் எனும் நிறுவனத்தால் இந்த டீ தூள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்ற தேயிலைகளைப் போல இல்லாமல் இந்த சிறப்பு டீ தூள் தேயிலைகளின் மொட்டுகளை வைத்து தயாரிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்
தேயிலையின் மொட்டுகளைச் சேகரிப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு முன்பாகவே அதைச் சேகரிக்க வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட தேயிலையின் மொட்டுகள் அதிக நறுமணம் கொண்டதாகவும் அதிக வசானையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நறுமணமிக்க சிறப்பு தேயிலை டீத்தூளை குவஹாத்தியில் நடைபெற்ற ஏலத்தில் ஒருவர் ரூ.75 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout