ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

 

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது. கொரோனா பேரிடருக்கு நடுவே இத்தனை விலை கொடுத்து இந்த டீத்தூளை ஒருவர் ஏலத்தில் எடுத்து இருக்கிறார்.

குவஹாத்தி அடுத்த திப்ருகான் எனும் பகுதியில் உள்ள மனோஹரி கோல்ட் டீ தேயிலைத் தோட்டம் எனும் நிறுவனத்தால் இந்த டீ தூள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்ற தேயிலைகளைப் போல இல்லாமல் இந்த சிறப்பு டீ தூள் தேயிலைகளின் மொட்டுகளை வைத்து தயாரிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்

தேயிலையின் மொட்டுகளைச் சேகரிப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு முன்பாகவே அதைச் சேகரிக்க வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட தேயிலையின் மொட்டுகள் அதிக நறுமணம் கொண்டதாகவும் அதிக வசானையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நறுமணமிக்க சிறப்பு தேயிலை டீத்தூளை குவஹாத்தியில் நடைபெற்ற ஏலத்தில் ஒருவர் ரூ.75 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார்.

More News

வியட்நாமை சூறையாடிய சூறாவளி… 100 க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!!!

வியட்நாமில் கனமழைக்கு நடுவே “மோலேவே” எனும் சூறாவளி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை ரசிகர்களுக்கு பிடித்த கெய்க்வாட்: ரஜினி-ருத்ராஜை ஒப்பிட்ட பிரபலம்!

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களாக அமைதியாக இருந்த ஷிவானி, தனக்கு மிங்கிள் ஆவதற்கு கொஞ்சம் டைம் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார்

எடை குறைப்பு மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள்: சிம்பு குறித்து இலக்கியா!

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 100 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருந்தார் என்பதும் அந்த எடையுடன் அவர் நடித்த ஒரு சில படங்கள் படுதோல்வி அடைந்தன என்பதும் தெரிந்ததே 

இளம் வீரர்களின் தோனி பாசம்: நெகிழ வைக்கும் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் தல தோனி மீது உள்ள அன்பு சிறிதளவுகூட ரசிகர்களுக்கு குறையவில்லை