ஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்!!!
- IndiaGlitz, [Friday,September 25 2020]
சீனாவில் 700 ஆண்டு பழமையான ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த ஓவியம் குறைந்தது இந்திய மதிப்பில் ரூ.114 கோடிக்கு ஏலம் போகும் எனவும் எதிர்ப் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் ஓவியங்களுக்கு விலையே நிர்ணயம் செய்யமுடியாத அளவிற்கு சிறப்பு பொருந்தியதாக இருக்கும். அதைப்போலத்தான் தற்போது பிரபல சீன ஓவியரின் ஓவியம் ஏலத்திற்கு வந்திருக்கிறது.
யுவான் வம்சத்தை சேர்ந்த இந்த ஓவியத்தை பிரபல ஓவியர் மாஸ்டர் ரென் ரென்ஃபா வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தில் 5 இளவரசர்கள் நன்றாகக் குடித்துவிட்டு குதிரை மீது திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர். கூடவே சில பணியாளர்களையும் அதில் பார்க்க முடிகிறது. பல வர்ணங்களைப் பூசப்பட்ட இந்த ஓவியம் சுருள் வடிவம் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் நீளம் 2 மீட்டர் என்றும் தகவல் கூறப்படுகிறது.
சோதபி நகரில் வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி ஆம் தேதி இந்த ஓவியம் ஏலத்திற்கு விடப்பட இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. 10 மில்லியன் டாலரில் இருந்து 15.5 மில்லியன் டாலர் வரை இந்த ஓவியம் விலைப் போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 1255-1327 ஆம் ஆண்டைச் சார்ந்த யுவான் வம்சத்தில் வரையப்பட்ட இந்த ஓவியத்தை இறுதியாக கியான்லான் வம்சத்தை சேர்ந்த நீதிமன்றம் ஒன்றில் இருந்து கைப்பற்றப் பட்டதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். அதற்கு அடையாளமாக கியான்லான் அரசனின் மகன் ஜியாகிங்கின் அரச முத்திரை இந்த ஓவியத்தில் பதியப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.