டிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்பெயின் நாட்டில் டிக்டாக்கில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நபர் ஒருவர் அதில் பெரிய அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனால் தற்போது அவருக்கு 4 ஆண்டிற்கும் மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் ஆரோன் பெக்ட்ரான் எனும் ராக் இசைக் கலைஞர் டிக்டாக் போன்ற சோஷியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் அதில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறை நண்பரிடம் ஒரு வித்தியாசமான உதவியை நாடி இருக்கிறார். இந்தக் கோரிக்கைக்கு அறை நண்பரான ஆண்ட்ரூ என்பவரும் ஒத்துக் கொண்டு உள்ளார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களது ஒப்பந்தத்தின்படி ஆண்ட்ரூ தன்னுடைய ஆண் உறுப்பை 12 இன்ஞ் நீளம் கொண்ட கத்தியால் அறுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆரோன் வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் போட்டு பெரிய அளவில் லைக்குளை அள்ளி விடுவார். இந்தப் புகழுக்குச் சன்மானாமாக ஆரோன், ஆண்ட்ரூவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விடுவார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியபடியே ஆண்ட்ரூ 12 இன்ஞ் கத்தியை எடுத்து தன்னுடைய ஆண் உறுப்பை வெட்டிக் கொண்டு அலறி இருக்கிறார். இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபரீத விளையாட்டுக்கு காரணமாக ஆரோனை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால் நான்கரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் ஆண்ட்ரூ தன்னுடைய ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ள வேறு ஒரு காரணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது ஆண்ட்ரூ தான் பிறந்ததில் இருந்தே தன்னை ஒரு ஆணாக உணர்ந்தது இல்லையாம். இதனால்தான் நண்பர் கேட்டவுடனே ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ள அவர் சம்மதித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன காரணமாக இருந்தாலும் சரி ஆரோன் சிறை செல்வது மட்டும் உறுதி என்றும் மீடியாக்கள் விமர்சித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments