வெறும் 11 நிமிடமே வன்புணர்வு செய்தார்… தண்டனையை பாதியாகக் குறைத்த சர்ச்சை தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு குற்றத்தின் மீதான விசாரணை ஒன்றில், குற்றவாளி வெறும் 11 நிமிடமே பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் சுவிட்சர்லாந்து சட்டப்படி தண்டனையை குறைக்கிறேன் என சர்ச்சை தீர்ப்பு வழங்கியுள்ளார் ஒரு நீதிபதி. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் 5-4 பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் தொடர்ந்து நடப்பதாக ஆம்னெஸ்டி எனும் அமைப்பு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பசல் எனும் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 33 வயது இளம்பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதால் சிறார்களுக்கான நீதிமன்றம் அவரை விசாரித்து வருகிறது. மற்றொருவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 31 வயதான ஆண். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணை வெறும் 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இந்தக் காரணத்தைக் கேட்ட நீதிபதி சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி பாலியல் குற்றம் சிறியதாக இருப்பதால் அவருக்கு வழங்கப்பட்ட 56 மாத சிறை தண்டனை 36 மாதங்களாக குறைக்கப்படுகிறது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்ப்பை கேட்டு கடும் அதிர்ச்சியுற்ற பெண்கள் அமைப்பினர் தற்போது நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments