பாடிக் கொண்டிருந்த போதே சரிந்து, உயிரிழந்த பிரபல பாடகர்… ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஒருவர் தன்னுடைய ரசிகர்களுக்கு முன்னிலையில் பாடிக் கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான பிக் போக்கி நேற்று டெக்சாஸ் மாகாணம் பியூமண்ட் நகரிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் பிரபல இசை கச்சேரியில் கலந்து கொண்டதாகவும் அப்போது பாடிக் கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
45 வயதான பிக் போக்கி மேடையில் சரிந்து விழுந்தபோது முதலில் சிபிஆர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். இந்தத் தகவல் தற்போது அமெரிக்க இசை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹுஸ்டன் பகுதியைச் பிக் போக்கியின் உண்மையான பெயர் மில்டன் பவல் என்பதுதான். இவர் ஸ்க்ரூ அப் கிளிக் குழுவில் இணைந்து தனது இசை பணியைத் துவங்கியுள்ளார். தொடர்ந்து, 1999 இல் ‘தி ஹார்டெஸ்ட் பிட் இன் தி லிட்டர்’ இசை ஆல்பம் மூலம் பிரபலமான இவர் பல்வேறு ஹிட் இசை ஆல்பங்களைக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கடந்த 2021 இல் இவருடைய ‘சென்செய்’ இசை ஆல்பம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த பிக் போக்கி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பிக் போக்கி எதனால் உயிரிந்தார் என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Houston rapper Big Pokey who was vaxxed died suddenly during a Juneteenth performance
— I Am (@butujuslost1) June 19, 2023
SIP🤲🏾🕊️ pic.twitter.com/gg5XaQspQs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments