பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரம்.. ஆபாச நடிகருடன் நடித்த பிரபல நடிகருக்கு கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரத்தில் ஆபாச நடிகருடன் இணைந்து பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ள நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பிரபலமான நடிகர்கள் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து மாத்திரை விளம்பரத்தில் நடிப்பதற்கு தயங்குவதுண்டு. ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆபாச நடிகருடன் இது போன்ற ஒரு விளம்பரத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பர வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இது போலி வீடியோ என்று நினைத்தேன், ஆனால் உண்மையான வீடியோ என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
ஆண்களின் தாம்பத்திய பிரச்சனை குறித்த விளம்பரத்தில் துணிச்சலாக நடித்ததற்காக ரன்விர்சிங்கை சிலர் பாராட்டினாலும் பலர் அவருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ரஷ்மி தேசாய் தனது சமூக வலைத்தளத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பரம் அனைத்து டிவி துறை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். டிவி என்பது மக்கள் செய்தி மற்றும் கிரிக்கெட்டை பார்க்கும் ஒரு ஊடகம், அதில் இது போன்ற ஆபாச மருந்து விளம்பரத்தை ஒளிபரப்புவது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
BTW people are also protesting against This video on X
— Atulkrishan (@iAtulKrishan1) February 13, 2024
I didn't find anything wrong @JohnnySins@RanveerOfficial#JohnnySins #ranbirsingh pic.twitter.com/U5eepgvgil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments