ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் விபரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர். ஒருசில போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்கவிழா பிரமாண்டமாக நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கவிழாவும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கவிழாவிலும் பாலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு விழாவை பிரமாண்டப்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடக்கவிழாவில் ரன்வீர்சிங், வருண்தவான், ப்ரினிதி சோப்ரா, ஜாக்க்லின் ஃபெர்னாண்டஸ் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கவிழாவில் ரன்வீர்சிங், வருண்தவான், ப்ரினிதி சோப்ரா, ஜாக்க்லின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் சுமார் 45 நிமிடங்களுக்கு தனித்தனியாகவும், இணைந்தும் நடனமாடுவார்கள் என்றும், இந்த நடனத்திற்காக தற்போது அவர்கள் பயிற்சி எடுத்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் போட்டியாக தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது

சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது.

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்

டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார்

புலம்புவதை விட்டு விட்டு ஆம்பளையா இருக்க பழகு - கெளதம்மேனன்

'துருவங்கள் 16' என்ற படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.