தோனி, சச்சின் படங்களை அடுத்து மேலும் ஒரு கிரிக்கெட் படம்

  • IndiaGlitz, [Wednesday,September 27 2017]

இந்திய கிரிக்கெட் வெற்றியாளர்கள் குறித்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வருவதை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் படம் உருவாகவுள்ளது.

ஏற்கனவே தோனி, சச்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் இந்தியா மட்டுமின்று உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதிலாராஜ் வாழ்க்கை வரலாறு படமும் விரைவில் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்தியாவுக்கு முதன்முதலில் உலகக்கோப்பையை கடந்த 1983ஆம் ஆண்டு பெற்று தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு '1983 வேர்ல்ட் கப்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ரன்வீர்சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கபீர்கான் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சல்மான்கான் நடித்த 'பாஜ்ராங்கி பைஜான், டியூப்லைட் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகைகள் பட்டியலில் விஜய் நாயகி

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

பாரீஸ், பல்கேரியாவுக்கு பயணம் செய்யும் சாயிஷா

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சாயிஷா, முதல் படத்திலேயே அனைவரும் கவரும் வகையில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

ஓவியாவின் அடுத்த படத்தின் முழு விபரங்கள்

ஓவியாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஓவியா ஆர்மியினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஓவியாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சனிக்கிரஹத்திற்கு செல்லும் '2.0' பட நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் நாயகி எமிஜாக்சனுக்கு அமெரிக்க டிவி தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல கோலிவுட் தயாரிப்பாளருக்கு ஸ்குருடிரைவர் குத்து: 2 பேர் கைது

கோலிவுட் திரையுலகின் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண்மணியன் தமிழில் 'வாயை மூடி பேசவும், 'காவியத்தலைவன்' போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.