தீயாய் பரவும் தீபிகா படுகோனின் பிகினி புகைப்படம்? பதறிய கணவர் நடிகரின் ரியாக்சன்!!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படம் ஒன்றை நடிகை தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருவதுடன் அதற்கு நடிகர் ரன்வீர் பதிவிட்டுள்ள கமெண்ட் ரசிகர்களிடையே படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை, நடிகராக இருந்துவரும் நடிகர் ரன்வீர் மற்றும் நடிகை தீபிகா இருவரும் 6 ஆண்டு காதலுக்குப் பிறகு கடந்த 2018 இல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சினிமாவில் எப்போதும் போல கவனம் செலுத்திவரும் இந்தத் தம்பதிகள் பொது வெளியிலும் நகைச்சுவையுடன் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இணையத்திலும் இவர்களுடைய சேட்டை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளை நிறத்திலான பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார். பார்ப்பதற்கு படு கிளாமராக இருக்கும் அந்த பிகினி உடை வெறுமனே ஒரு முடிச்சில் நின்று கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில் இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நகைச்சுவை ததும்ப கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல நடிகை தீபிகாவின் இந்த பிகினி புகைப்படத்திற்கு நடிகரும் அவருடைய கணவருமான ரன்வீர் கபூர், ‘ஒரு எச்சரிக்கை நன்றாக இருந்திருக்கும்’ என்று காமெடியாக கமெண்ட் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் நட்சத்திர ஜோடிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம்’ திரைப்படத்தில் நடிகை ஆலியாவுடன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை தற்போது பெற்று வருகிறது. தொடர்ந்து அவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பைஜு பாவ்ரா’ திரைப்படத்திலும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய டான் திரைப்படத்தின் அடுத்த வெர்சனான ‘டான்3’ திரைப்படத்திலும் இணையவுள்ளார்.

அதேபோல நடிகை தீபிகா படுகோன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் த்ரில்லர் திரைப்படமான ‘ஃபைட்டர்’ திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமவில் பிசியாக நடித்துவரும் நடிகை தீபிகாவின் படு கிளாமரான பிகினி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிவரும் நிலையில் அதற்கு அவருடைய கணவர் ரன்வீர் சிங் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்று கமெண்ட் அடித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் அந்த கமெண்ட் வைரலாகியும் வருகிறது.

More News

20 கோடி பட்ஜெட்.. 200 கோடி வசூல்.. வெற்றி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

 ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமான நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக

இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா”: ரிலீஸ் தேதி அறிவிப்பு..

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின்

அஜித்தின் வெளிநாட்டு பைக் பயணம்.. மாஸ் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி..!

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் அவர் அஜித்தின் பைக் சுற்றுப்பயண புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய அணி.. 234 தொகுதிகளிலும் பூத் நிர்வாகிகள்.. விறுவிறுப்பாகும் அரசியல் களம்..!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்க்கும் போது அவர் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்.. பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டால் அதற்கு தனுஷ் தான் சரியான நபர் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.