'ரஞ்சிதமே' பாடகி மானஸிக்கு திருமணமாகி குழந்தை உள்ளதா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலை விஜய் மற்றும் எம்எம் மானஸி ஆகிய இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகிய நிலையில் தற்போது இந்த பாடல் அளவுக்கு மானஸியும் பிரபலமாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜய்யுடன் இணைந்து பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் படத்தில் ஒரு பாடலாவது பாட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருடனே பாடும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மானஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடியிருந்தாலும் அவரை புகழின் உச்சிக்கு ’ரஞ்சிதமே’ பாடல் தான் எடுத்துச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மானஸிக்கு திருமணம் நடந்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout