'ரஞ்சிதமே' பாடகி மானஸிக்கு திருமணமாகி குழந்தை உள்ளதா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 07 2022]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலை விஜய் மற்றும் எம்எம் மானஸி ஆகிய இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகிய நிலையில் தற்போது இந்த பாடல் அளவுக்கு மானஸியும் பிரபலமாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய்யுடன் இணைந்து பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் படத்தில் ஒரு பாடலாவது பாட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருடனே பாடும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மானஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடியிருந்தாலும் அவரை புகழின் உச்சிக்கு ’ரஞ்சிதமே’ பாடல் தான் எடுத்துச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மானஸிக்கு திருமணம் நடந்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
 

More News

ஜாடை மாடையாக செல்லச்சண்டை போடும் ராபர்ட்-ரக்சிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், &

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷ் படம்.. நாயகி, இயக்குனர் யார் தெரியுமா?

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பல திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அதேபோல் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்

கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய இரண்டு மாநில முதலமைச்சர்கள்!

உலக நாயகன் கமல்ஹாஸன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை

வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய கார்த்தியின் 'சர்தார்': அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? கடந்த வாரம் தப்பித்தவர் இந்த வாரம் வெளியேறுவாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்பதும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற