ஆணவக்கொலைக்கு எதிராக பொங்கிய இயக்குனர் பா.ரஞ்சித்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோலைராஜ் என்பவரும் ஜோதி என்ற பெண்ணும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரும் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த சோலைராஜ், ஜோதி ஜோடி காதல் திருமணம் செய்ததன் காரணமாக கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலை செய்த மர்ம கும்பல் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டியல் இனத்தவர்கள் மட்டும் கொலை செய்யப்படும்போது பொங்கி எழும் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போதும் டுவிட்டரில் பொங்கியுள்ளார். அவர் கூறியதாவது:
கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ் - வர்ஷினிபிரியா, திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து தூத்துகுடி(மா)குளத்தூர் சமத்துவபுரத்தில், சாதிமறுப்பு திருமணம் செய்த சோலைராஜா - ஜோதி படுகொலை. நாம்தமிழர்! நாம்இந்து! நாம்திராவிடர்! இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.
படுகொலை செய்யப்பட்ட சோலைராஜா, ஜோதி இருவரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சுயசாதி பற்று இருக்கும் பட்டிலினத்தவர்களே! *விதைத்தவர்கள் அறுவடை செய்துகொண்டு இருக்கிறார்கள்! செய்வார்கள்!* சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்துகொண்டிருக்கிறது. விழித்து கொள்வோமா?
வழக்கம் போல் தமிழகஅரசு “தமிழகத்தில் ஆணவ கொலை நடக்கவே இல்லை” என்று அறிவிக்கும்! “யாருங்க இப்போல்லாம் ஜாதி பாக்குறாங்க?”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும்! “இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர்! வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும்! மற்றும் ஒன்று நிகழும்' என பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆணவக்கொலை என்றாலே பொங்கி எழும் ஒருசில அரசியல்வாதிகள் இந்த கொலை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ்_வர்ஷினிபிரியா,திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து தூத்துகுடி(மா)குளத்தூர் சமத்துவபுரத்தில், சாதிமறுப்புதிருமணம் செய்த சோலைராஜா_ஜோதி படுகொலை. நாம்தமிழர்!நாம்இந்து! நாம்திராவிடர்! இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.
— pa.ranjith (@beemji) July 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments