கை கால் பிடித்தவருக்கு பிரதமர் பதவியா? ரஞ்சிதாவுக்கு எதிர்ப்பு.. கைலாசா நாட்டில் கோஷ்டி மோதல்?
- IndiaGlitz, [Monday,October 09 2023]
நித்யானந்தா உருவாக்கி உள்ளதாக கூறப்படும் கற்பனை நாடான கைலாசா என்ற நாட்டில் ரஞ்சிதாவுக்கு எதிராக ஒரு கோஷ்டி செயல்பட்டு வருவதாகவும் ரஞ்சிதா கைலாசா நாட்டின் அடுத்த பிரதமர் ஆவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பெங்களூரில் ஆசிரமம் நடந்து வந்த நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவர் தலைமறைவானார். ரஞ்சிதா உட்பட பல்வேறு சீடர்களுடன் கைலாசா என்ற நாட்டில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கைலாசா என்ற ஒரு நாடு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கற்பனை நாடான கைலாசாவில் நித்தியானந்தா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கைலாசா நாட்டின் அடுத்த பிரதமர் ரஞ்சிதா என்றும் அவர்தான் தற்போது பல அதிகாரங்களை கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நித்தியானந்தாவின் மற்ற சீடர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நித்தியானந்தாவுக்கு கை கால் பிடித்து விட்டவருக்கு பிரதமர் பதவியா? என்று அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே கைலாசா நாட்டில் ரஞ்சிதாவுக்கு எதிராக ஒரு கோஷ்டி கிளம்பி உள்ளதாகவும் ரஞ்சிதாவும் ஒரு அணியை ஏற்படுத்தி தனக்கு ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.