close
Choose your channels

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

Friday, June 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

 

'அட்டக்கத்தி' , 'மெட்ராஸ்' ஆகிய இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றி ரஞ்சித்தை முன்னணி இயக்குனர்களின் பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டது. தற்போது ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் 'மெட்ராஸ்' படம் முடிந்தவுடன் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டிருந்தார். ஆனால் 'கபாலி' வாய்ப்பு கிடைத்ததால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தனது புரட்சிகரமான கருத்துக்களை ரஜினியை பயன்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ரஞ்சித், சூர்யா படத்திலும் அதனை தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment