ராஜராஜ சோழன் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் ரஞ்சித்

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழ மன்னர் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் மற்றும் மயிலாடுதுறை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ரஞ்சித் தரப்பில் இருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் தனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் என்றும் தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல' என்று அதில் கூறப்பட்டுள்ளது.