அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினர்: பிரபல தமிழ் இயக்குனர் கண்டனம்

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

அமெரிக்காவில் கடந்த வாரம் மினியாப்பொலிஸ் என்ற பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலாலேயே மிதித்து கொல்லப்பட்டார். இது குறித்த வீடியோ உலகமெங்கும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது என்பதும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து இந்தியாவில் உள்ள பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதற்காக குரல் கொடுத்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் தனது சமூக வலைப்பக்கத்தில் இதுகுறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

ஜார்ஜ் ஃப்ளாய்டை மூச்சுவிட முடியாமல் இனவெறி பிடித்த அந்த அதிகாரி காலால் மிதித்து கொன்றார். ஆனால் நம்மால் மூச்சு விடமுடியும். எனவே இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் என பதிவு செய்துள்ளார். மேலும் இந்தியாவிலும் தலித் மக்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதாகவும் இதனை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்