முதல் நாளே ரவீந்தருக்கு பிரச்சனை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட ரஞ்சித்- அருண்..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டியாளர் ரவீந்தருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேயத்துடன் ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய இருவரும் அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்து வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே போட்டியாளர்கள் விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும் விவாதம் செய்தனர். குறிப்பாக, ஏழு சீசன்களை விமர்சித்த ரவீந்தர், சக போட்டியாளர்களுக்கு எடுத்து வைத்த சில குறிப்புகள் அனைவருக்கும் உதவியாக இருந்தது.

ஆனால், அதே நேரத்தில் டாஸ்க்குகள் செய்ய அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதும், நேற்றைய டாஸ்க்கில் அவர் மிகுந்த சிரமப்பட்டதையும் 24 மணி நேர நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இதனைத் தொடர்ந்து திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. உடனே சக போட்டியாளர்களான ரஞ்சித் மற்றும் அருண், அவரை கைத்தாங்கலாக அவரது படுக்கைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு ஆறுதல் கூறி, உடம்புக்கு ஒன்றும் இல்லை, சரியாகிவிடும் என ஊக்கமளித்தனர். இந்த இருவரின் மனிதநேயச் செயலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

More News

நீங்க போறது நல்லது கிடையாது: சுனிதா செய்த நோஸ்கட் .. ஜாக்குலின் கண்ணீர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்றைய முதல் புரமோ வெளியாகி உள்ள

2025 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும் - ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கணிப்பு.!

பிரபல ஜோதிடர் A.R. Balakrishna Reddy அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், 2025 ஆம் ஆண்டின் ஜோதிட பலன்களை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

500 டான்சர்களுடன் 'தளபதி 69' பாடல் படப்பிடிப்பு.. பாடலாசிரியர், பாடகர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பாடலாசிரியர் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ஹீரோ, ஹீரோயின் யார்?

பிரபல தமிழ் திரைப்பட நிறுவனம் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நான் தயங்கினேன்.. ஆனால் விஜய் கணக்கு தப்பவில்லை.. ஹிட்டான குத்துப்பாட்டு குறித்து வைரமுத்து..!

விஜய் படத்திற்காக ஒரு குத்து பாட்டு எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது நான் தயங்கினேன் என்றும் ஆனால் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறியதால்