சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 02 2019]

சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார். ராம்ஜீவன் இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை பாஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் 'ரேஞ்சர்' என அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் புலி இனத்தை காக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஒரு புலி நடித்துள்ளது என்பதும் இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வரும் இந்த படத்தை தரணிதரன் இயக்கி வருகிறார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரங்கா, ரேஞ்சர் தவிர மாயோன், வால்டர் ஆகிய படங்களிலும் சிபிராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷ்ணுவிஷால் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

கவின், நீயும் லாஸ்லியாவும் வெளியே போங்கடா! சாண்டி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் சேரனையும் ஷெரினையும் கவின் நாமினேட் செய்தார் என்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வந்தது.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி-அபிராமி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் போட்டியாளராக மாறியிருப்பது, பார்வையாளர்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் பிக்பாஸ் நிர்வாகம் நடந்து

மாறன் சகோதரர்களுடன் தளபதி விஜய் சந்திப்பு!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு

யோகிபாபுவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

சமீபத்தில் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்த 'தர்ம பிரபு' 'கூர்கா ஆகிய திரைப்படங்கள் வெளி வந்த நிலையில் அவர் தற்போது இன்னும் ஒரு சில படங்களிலும்