அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ரங்கராஜ் பாண்டே கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்து வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கிட்டத்தட்ட 15 நாட்கள் அஜித்துடன் இணைந்து நடித்ததாகவும், அந்த அனுபவம் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: நேர்கொண்ட பார்வை ஒரு அற்புதமான படம். இந்த படத்தை அனைவரும் எனக்காக இல்லையென்றாலும் இந்த படத்தின் கதை தற்போதைய சமுதாயத்திற்கு தேவையான ஒன்று என்பதால் இந்த படத்தை பாருங்கள்.
அஜித்துடன் நடித்த காட்சிகள் குறித்து சொல்ல முடியாத நிலையில் இருந்தாலும் எல்லோரும் சொல்வது போல் அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் மிக ஆச்சரியத்தக்க வகையில் பழகுகிறார். உண்மையாக பழகும் நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்கும் அளவில் உள்ளார். அவருடன் காலை முதல் மாலை வரை 15 தினங்கள் அருகிலேயே இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்' என்று ரங்கராஜ் பாண்டே கூறினார்.
#RangarajPandey Sir about #NerKondaPaarvai And Thala #Ajith
— Ajith Network (@AjithNetwork) March 17, 2019
| #NKPTrialBegins pic.twitter.com/zI0USCWOt1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com