அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ரங்கராஜ் பாண்டே கூறியது என்ன?

  • IndiaGlitz, [Monday,March 18 2019]

அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்து வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கிட்டத்தட்ட 15 நாட்கள் அஜித்துடன் இணைந்து நடித்ததாகவும், அந்த அனுபவம் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: நேர்கொண்ட பார்வை ஒரு அற்புதமான படம். இந்த படத்தை அனைவரும் எனக்காக இல்லையென்றாலும் இந்த படத்தின் கதை தற்போதைய சமுதாயத்திற்கு தேவையான ஒன்று என்பதால் இந்த படத்தை பாருங்கள்.

அஜித்துடன் நடித்த காட்சிகள் குறித்து சொல்ல முடியாத நிலையில் இருந்தாலும் எல்லோரும் சொல்வது போல் அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் மிக ஆச்சரியத்தக்க வகையில் பழகுகிறார். உண்மையாக பழகும் நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்கும் அளவில் உள்ளார். அவருடன் காலை முதல் மாலை வரை 15 தினங்கள் அருகிலேயே இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்' என்று ரங்கராஜ் பாண்டே கூறினார்.
 

More News

தேர்தல் 2019: கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது?

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய ஒரு வருடத்தில் முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளை எந்தவித கூட்டணியும் இல்லாமல்

நானும் செளகிதார் தான்: 'வாட்ச்மேன்' படக்குழுவினர்களின் வைரல் போஸ்டர்

கடந்த சில நாட்களாக செளகிதார் என்ற வார்த்தையை இந்திய மக்கள் அனைவரும் கேள்விப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. 

பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்ற பாமக, முதல்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

அதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிகும் 18 தொகுதி வேட்பாளர்கள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும்

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 4 வாரிசு வேட்பாளர்கள் போட்டி!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் பிரித்து கொடுத்தது போக, மீதியுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக,