400 ஆதிவாசி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி உதவிய பாகுபலி வில்லன் நடிகர்!
- IndiaGlitz, [Thursday,June 10 2021]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி “பாகுபலி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானார். அவர் தற்போது கொரோனாவால் அவதிப்பட்டு வரும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான அத்யாவசியப் பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு மருத்துவ பொருட்களையும் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “லீடர்” படத்தில் அறிமுகமான நடிகர் ராணா டகுபதி “பாகுபலி“, “பெங்களூர் டேய்ஸ்“ “ருத்ரம்மாதேவி” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் தல அஜித்துடன் “ஆரம்பம்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான “காடன்” திரைப்படத்திலும் இவரது நடிப்பு தனிக்கவனம் பெற்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் நடிகர் ராணா டகுபதி நன்கொடையாக வழங்கி உள்ளார். கொரோனா நேரத்தில் நடிகர் ராணா செய்த இந்தக் காரியம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர் தற்போது, நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜுமோகன் நடித்து மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அதோடு “விராத பர்வம்” எனும் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். கொரோனா நேரத்தில் நடிகர் ராணா ஆதிவாசி குடும்பத்திற்கு நன்கொடை அளித்து இருப்பது பல தரப்புகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.