வீட்டு சாப்பாடுக்காக ஏங்குனேன்🥲அப்போ இவங்க என்கூட இல்ல...உடைந்து போய் பேசிய உமா ரியாஸ்கான்
- IndiaGlitz, [Friday,April 12 2024]
உமா ரியாஸ்கான் என்பவர் இந்திய நடிகை ஆவார்.இவர் தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தை காமேஷ் ஒரு இசையமைப்பாளர்.தாயார் கமலா கமலேஷ் புகழ்பெற்ற நடிகை ஆவார் .இவர் ரியாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு இப்போது அவருக்கு சாரிக் ஹாசன் மற்றும் சமந்த் என்ற இரு மகன்கள் உள்ளார்.இவர் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,
அனைவருக்கும் ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்.நான் நன்றாக பிரியாணி செய்வேன்.ஆனால் எனது இரண்டாவது மகனுக்கு மசாலா பிடிக்காது என்பதால் அதை சமைப்பதை குறைத்து கொண்டேன்.அதே போல் என் இரண்டாவது மகனை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவன் ஆடிஷனில் கலந்து கொண்டான்.ஒரு பெரிய இயக்குனர் என் மகனை அழைத்து நடித்து காட்ட சொல்லி இவரும் நடித்து, அவர் சில கேள்விகள் கேட்டு என் அவ்வளவு பெரிய இயக்குனரிடம் எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என சொல்லி விட்டு வந்து விட்டான்.எனவே என் மகன் இப்படித்தான்.எங்களுக்கு கோவம் வரும் ஆனால் எங்களிடம் வந்து ஒரு சிரிப்பு சிரிப்பான்.அவ்வளவு தான்,நாங்க எல்லாவற்றையும் மறந்து விடுவான்.
அண்ணன் தம்பி என்றெல்லாம் இவர்கள் இருவரும் பேசுவதில்லை எப்போதும் வாடா போடா என்றே பேசி கொள்வார்கள்.மேலும் நோன்பு என்பது எல்லோரும் கட்டாயம் எடுக்க வேண்டிய ஒன்று,ஆனால் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.நான் டயட் இருப்பதால் எனக்கு எல்லா நாளும் நோன்பு தான்.மற்றும் நோன்பு என்பது வாழ்க்கையில் இருக்க கூடிய ஒரு பங்கு அதை ஒரு வேலையாக இல்லாமல் கடமையாக செய்ய வேண்டும் அவ்ளோ தான் .
நான் கல்யாணம் ஆனா புதிதில் எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.நான் முழுக்க முழுக்க ஹிந்து பிராமண குடும்பம் எனவே எனக்கு இதை பற்றி ஏதும் தெரியவில்லை.ஆனால் நான் படித்தது எல்லாம் கிறிஸ்டின் ஸ்கூல்.எனக்கு அந்த முறைப்படி போட்டு வைக்காமல் அப்படியே இருந்து பழகி போச்சி.எனக்கு மதம் சார்ந்த எந்த ஒரு விஷயமும் தெரியாது.அப்போது திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக நோன்பு இருக்கும்போது நான் அதில் ரொம்ப ஆர்வமாக எல்லாம் நாளும் எல்லா நோன்பும் இருந்தேன்.
நான் எல்லாவற்றையும் சந்தோஷமாக என் கணவருக்காக செய்தேன்,ஏனென்றால் அதில் இருப்பது எங்களுடைய காதல்.ஒருவர் சொல்லும்போது மற்றொருவர் கேட்டு கொள்வது விட்டு கொடுப்பது,நம்மளுடைய துணைக்காக தன்னை மாற்றி கொள்வது இது அனைத்தையும் நாங்கள் இருவரும் செய்தோம்.
மேலும் சுன்னத் கல்யாணம் என்பது எங்களை பொறுத்தவரை நல்ல விஷயம் அது மிகவும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்.அப்படி ஆபரேஷன் செய்வது ஒரு வகையில் நல்லது மற்றும் அவசியம்.பொதுவாக பத்து வயதில் இதை செய்வார்கள்.நான் வேண்டாம் என சொல்லினேன் ஆனால் எனக்கும் என் தம்பிக்கும் சேர்த்து செய்தார்கள்.
அப்போல்லாம் ரொம்ப பயந்தேன் ஆனாலும் கூட இப்போது புரியுது இது எல்லாம் நல்லதுக்கு தான் என ரியாஸ்கான் மற்றும் உமா,சாரிக் சேர்ந்து குடும்பமாக அளித்து பேட்டியை மேலும் காண கீழே உள்ள வீடீயோவை காணவும்.