படமே முடிய போகுது.. 'விடாமுயற்சி' திரைப்படத்தில் திடீரென இணைந்த டிவி பிரபலம்..!

  • IndiaGlitz, [Friday,December 20 2024]

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பும் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென டிவி பிரபலம் ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதில், ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு ஒரு பக்கமும், தொழில்நுட்ப பணிகள் இன்னொரு புறமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சற்றுமுன் இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரம்யா சுப்பிரமணியன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மொழி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானார் ரம்யா சுப்பிரமணியன். அதன் பிறகு, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ரசவாதி என்ற படத்தில் ஒரு டாக்டர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்திலும் இணைந்துள்ளார். படம் முடிவடையும் கடைசி நேரத்தில் ரம்யா இணைந்துள்ளதை அடுத்து, அவரது இணைப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

வெற்றிக்கான சூத்திரம் எது? பணமா? ஆன்மீகமா? : யோக குரு பரம் ஸ்ரீ சூரத் என்ன சொல்கிறார்?

இந்த வீடியோவில், ஆன்மீக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இடையே உள்ள தொடர்பை பிரம்மஸ்ரீ சூரத் ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

பிரபல ஹீரோ படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன்..! 

பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தம்பிகளா.. வேணாம்டா.. செய்தியாளர் சந்திப்பில் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சூரி..!

சூரி நடித்த 'விடுதலை 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படத்தை பார்த்த பின் தியேட்டர் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, "தம்பிகளா, வேணாம்டா?"

பாரம்பரிய ஜோதிடத்தின் ரகசிய உண்மைகள்: ஸ்ரீ குரு லட்சுமி நாராயணன்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஸ்ரீ குரு லட்சுமி நாராயணன் அவர்கள் அளித்த பேட்டியில் ஜோதிடத்தின் அடிப்படைகள், பரிகாரங்கள் மற்றும் நட்சத்திரங்களின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

சொர்க்கம் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வீர்களா? காவல்துறைக்கு ராம்கோபால் வர்மா கேள்வி!

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியை பார்க்க கூட்டம் கூடிய போது மூன்று பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும், அப்படி என்றால் அந்த மூன்று பேரின் மரணத்திற்கு காரணம்