படமே முடிய போகுது.. 'விடாமுயற்சி' திரைப்படத்தில் திடீரென இணைந்த டிவி பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பும் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென டிவி பிரபலம் ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதில், ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு ஒரு பக்கமும், தொழில்நுட்ப பணிகள் இன்னொரு புறமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சற்றுமுன் இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரம்யா சுப்பிரமணியன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டு "மொழி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானார் ரம்யா சுப்பிரமணியன். அதன் பிறகு, "மங்காத்தா", "ஓ காதல் கண்மணி", "மாஸ் என்கிற மாசிலாமணி", "வனமகன்" உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான "ரசவாதி" என்ற படத்தில் ஒரு டாக்டர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது "விடாமுயற்சி" படத்திலும் இணைந்துள்ளார். படம் முடிவடையும் கடைசி நேரத்தில் ரம்யா இணைந்துள்ளதை அடுத்து, அவரது இணைப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actress @actorramya is on board for VIDAAMUYARCHI 🔥 Gear up to witness her elegance on screen. 🤩#Vidaamuyarchi From Pongal 2025 #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial… pic.twitter.com/Q5Sc81c2Ow
— Suresh Chandra (@SureshChandraa) December 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com