எப்படி முடிந்தது? ரம்யாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ஆச்சரியமடையும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மற்றும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து எப்படி இவரால் மட்டும் முடிந்தது? என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’, அமலாபால் நடித்த ‘ஆடை’ உள்பட ஒரு சில படங்களிலும் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தவர் ரம்யா சுப்பிரமணியம். இவர் கடந்த சில வாரங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
அதில் நான்கு வாரங்களுக்கு முந்தைய தோற்றமும் தற்போது உள்ள தோற்றத்தையும் ஒப்பிடும் வகையில் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் நான்கு வாரத்தில் இரண்டரை கிலோ எடை குறைந்ததோடு இரண்டு இன்ச் சுற்றளவும் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான உடற்பயிற்சி செய்தால் இது சாத்தியம்தான் என்று அவர் கூறியிருப்பதையும், அவர் பதிவு செய்த புகைப்படங்களையும் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து எப்படி ரம்யா உங்களால் முடிந்தது? இந்த உடல் எடை குறைப்பின் ரகசியம் என்ன? என்று கேட்டு வருகின்றனர். ரம்யா சுப்பிரமணியன் பதிவு செய்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
It’s not about being better than someone else,it’s about being better than who used to be ????.
— Ramya Subramanian (@actorramya) February 8, 2021
4 weeks,2.5 kgs down and 2 inches lost.What you’re seeing is my own recent and proudest physical transformation to date ??.#HappyMe pic.twitter.com/Ydmq0eOveW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com