பிக்பாஸ் நடிகருடன் இணைந்து தோட்டாவாக மாறிய ரம்யா பாண்டியன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து ’தோட்டா’ என்ற ஆல்பத்தில் நடித்து உள்ளதை அடுத்து இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களான ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் தனித்தனியே திரையுலகில் வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தற்போது இருவரும் இணைந்து ’தோட்டா’ என்ற ஆல்பத்தில் நடனம் ஆடியுள்ளனர் .
Noise and Grains என்ற பிரபல யூடியூப் சேனலின் தயாரிப்பான இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது .
ரம்யா பாண்டியன் மற்றும் ரியோராஜ் ஆகிய இருவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் தனித்தனியே வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ரம்யா பாண்டியன் இந்த போஸ்டரில் மிகவும் அழகாகவும் செம காஸ்ட்யூமில் இருப்பதாகவும், அதேபோல் ரியோ ராஜ் ஸ்டைலாக மாஸ் காட்டுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to launch #THOTA First look poster of @iamramyapandian??
— aishwarya rajesh (@aishu_dil) April 24, 2022
Stay tuned with @Pingrecords & @noiseandgrains for more updates ??
@rio_raj@brittoguru @karya2000 @itisveer @DevPrakashRegan #Pingrecordsofficial #noiseandgrains @onlynikil pic.twitter.com/OnBzqlo3nG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com