close
Choose your channels

எனது முதல் அனுபவம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குகையில் கிடைத்த தியான அனுபவத்தை பகிர்ந்து உள்ளேன் என தனது முதல் குகை அனுபவத்தை ரம்யா பாண்டியன் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ மற்றும் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரிஷிகேஷில் இருக்கும் ரம்யா பாண்டியன் அங்கிருந்து சில அற்புதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ரிஷிகேஷில் உள்ள வசிஷ்டா குகைக்கு சென்றுள்ள அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

ரிஷிகேஷில் உள்ள வசிஷ்டா குகையில் உள்ள சாந்தத்தில் மூழ்கி போனேன். இதுதான் எனது முதல் குகை தியான அனுபவம். அந்த காட்சிகளை உங்களுக்கு நான் பகிர்ந்து உள்ளேன். இந்த இடத்தில் பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட எதிரொலிகள் என்னுடைய ஆன்மாவிற்கு உள் அமைதியை தருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment